சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணி: ஆட்சியர் ஆய்வு

  By நாமக்கல்  |   Published on : 27th September 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திங்கள்கிழமை (செப். 26) தொடங்கி அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.
   நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் மற்றும் பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான படிவங்கள், தேர்தல் குறிப்பு கையேடுகள் உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பொருள்கள் மற்றும் படிவங்கள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ராசிபுரம் நகராட்சி, காக்காவேரி ஊராட்சி அலுவலகம், சீராப்பள்ளி பேரூராட்சி அலுவலகம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆட்சியர் நேரில் சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
   உள்ளாட்சித் தேர்தலை நாமக்கல் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடத்தி முடித்திட அனைத்து அலுவலர்களும் தேர்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி முனைப்போடு பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
   இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai