சுடச்சுட

    

    காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி 8-வது வார்டை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 27th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 8-ஆவது வார்டை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
     சேந்தமங்கலம் வட்டம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி சேர்ந்த 8-ஆவது வார்டு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெட்டியில் சேர்த்த மனு விவரம்:
     8-ஆவது வார்டில் 547 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இதில் 510 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். சுமார் 37 பேர் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீட்டில் இந்த வார்டு உறுப்பினர் பதவி எஸ்.சி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஒதுக்கீட்டை மாற்றி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     எஸ்சி பிரிவினர் சுமார் 37 பேரும் ஏற்கனவே 8-ஆவது வார்டு வாக்காளர் பட்டியலில் இல்லை. தற்போது, வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலில் 7-ஆவது வார்டில் இருந்து இவர்களது பெயர் 8-ஆவது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்டது.
     மேலும் இதுவரை எங்களது வார்டு அமைந்துள்ள இடம் வடக்கு திருமலைகிரி காட்டுக்கொட்டாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தவறுதலாக இச்சிக்குட்டை அருந்ததியர் தெரு என்று குறிப்பிட்டு உள்ளனர்.
     எங்கள் வார்டில் அருந்ததியர் தெரு என்பது இல்லை. இதனால் இதனை மாற்றி திருமலைகிரி காட்டுக்கொட்டாய் என்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து தர வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai