சுடச்சுட

    

    சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு: பருத்திப்பள்ளி கிராம மக்கள் புகார்

    By நாமக்கல்,  |   Published on : 27th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
     நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடக்க இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
     நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே பருத்திப்பள்ளி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுவை போட்டு சென்றனர்.
     அந்த மனு விவரம்: மல்லசமுத்திரம் வட்டாரம் பருத்திப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கித்தருமாறு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருந்தோம். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
     எங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், எங்களுக்கு வீட்டை ஒதுக்காமல், வேறு ஊர் மக்களுக்கு வீட்டினை அதிகாரிகள் ஒதுக்கித் தந்துள்ளனர். இதில் பலர் மன உளைச்சலில் உள்ளனர். சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் 50 வீடுகள் பூட்டிய நிலையிலேயே இருப்பதால் முள்புதர்கள் நிரம்பி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி உள்ளது. சமத்துவபுரம் வீட்டை ஒருசிலர் வாடகைக்கும், போக்கியத்திற்கும் கொடுத்துள்ளனர். அதேபோல், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் அதிக வீடுகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
     எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, வீடோ, நிலமோ இல்லாத எங்கள் பகுதி மக்களுக்கு சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai