சுடச்சுட

    

    ஜேசிபி மூலம் தூக்கப்பட்ட மின்கம்பம் பட்டு இளம்பொறியாளர் பலி: 4 பேர் கைது

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 27th September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இள மின் பொறியாளர் மீது ஜேசிபி வாகனத்தின் மூலம் தூக்கப்பட்ட மின் கம்பம் பட்டதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
     பரமத்தியில் இருந்து திருசெங்கோடு செல்லும் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை அரசு ஆரம்பு சுகாதார நிலையம் அருகே ஜேசிபி வாகன உதவியுடன் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் போது எவ்வித எச்சரிக்கை பலகைகள் வைக்காமலும் மாற்றுத் தடம் அமைக்காமலும் இப் பணி நடைபெற்றுள்ளது.
     ராசிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் முத்துக்குமார் (52). இவர் நல்லூர் துணை மின் நிலையத்தில் இள மின் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். திங்கள்கிழமை காலை நல்லூரில் இருந்து அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
     அப்பொழுது ஜேசிபி வாகனத்தின் மூலம் தூக்கப்பட்ட மின்கம்பம் முத்துக்குமார் மீது பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பரமத்தி அருகே உள்ள மாவுரொட்டியைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் வினோத்குமார் (23), விழுப்புரம் வீரப்பன் (32), வசந்தபுரம் ராஜா (42), இளையராஜா (41) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai