சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் முதல், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் உள்ளாட்சி அமைப்புகள் விவரம்

  By நாமக்கல்,  |   Published on : 27th September 2016 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ள உள்ளாட்சி அமைப்புகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
   தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் விவரம்:
   பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் திருச்செங்கோடு நகராட்சிகளின் வார்டு கவுன்சிலர்கள், ஆலாம்பாளையம், அத்தனூர், மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி மற்றும் வெண்ணந்தூர் பேரூராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.
   எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.
   இரண்டாம் கட்டமாக அக்டோபர் 19-ஆம் தேதி நாமக்கல் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவி, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர், சேந்தமங்கலம், வேலூர், வெங்கரை பேரூராட்சிகளின் கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.
   எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மோகனூர், நாமக்கல், பரமத்தி, புதுச்சத்திரம் மற்றும் சேந்சமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, ஊராட்சித் தலைவர் பதவி, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.
   வேட்பு மனு அளிக்கும் இடம்
   வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை (செப். 26) தொடங்கி அக்டோபர் 3-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.
   நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளப்படும்.
   நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்கள் 322 கிராம ஊராட்சிகள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சியும் உள்ளன.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai