சுடச்சுட

    

    பரமத்தி வேலூரில் தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்: 57 பேர் கைது

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 27th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலையைக் கண்டித்துத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
     இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமாரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத் தலைமையில் பரமத்தி வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பரமத்தி வேலூர் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், பேருந்து நிலையப் பகுதியில் இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளர் சசிக்குமாருக்கு வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி விளம்பர தட்டிகளை அகற்றியதைக் கண்டித்தும் பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத், மாவட்டச் செயலாளர்கள் கணேசன், சரவணன், பரமத்தி ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், கபிலர்மலை ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், மோகன்ராஜ், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல், ரமேஷ் உள்ளிட்ட 57 பேரை பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai