சுடச்சுட

    

    மகன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 27th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகன் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் கோரிக்கை விடுத்தார்.
     ராசிபுரம் வி.நகர் பகுதியைச் சேர்ந்த நாசர் அலி மனைவி நூர்ஜகான் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
     கணவர் இறந்துவிட்டார், ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். மகன் முபாரக்குக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்மா பேகம் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது, அஸ்மாக பேகம் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். நான் வசிக்கும் பகுதியில் கணவனை இழந்து வசித்து வந்த ஒரு பெண்ணுக்கும், என் மகனுக்கும் தவறான பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என் மகன் முபாரக்கை, அப்பெண் வற்புறுத்தி உள்ளார். இதனை ஏற்க மறுத்ததால், அப்பெண் உட்பட மூன்று பேர் சேர்ந்து என் மகனை கொலை செய்வதாக மிரட்டி உள்ளனர்.
     இதனால் அதிர்ச்சி அடைந்த என் மகன் முபாரக் கடந்த 15-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் 18-ஆம் தேதி உயிரிழந்தார். எனவே, கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai