Enable Javscript for better performance
மழைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மழைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 27th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வழங்கும் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள், குலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மண்பாண்டத் தொழிலாளர்கள் அங்குள்ள பெட்டியில் சேர்த்த மனு விவரம்:
     தமிழக முதல்வர் ஜெயலலிதா, எங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றி உள்ளார். திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்கிறோம். மேலும் எங்களது கோரிக்கைகளான மண்பாண்டம், நாட்டுச் செங்கல், சொருகு ஓடு செய்கின்ற குலாளர் மக்களுக்கு இலவசமாக களிமண் எடுத்துக் கொள்ள, ஒரே மாதிரியான அரசாணை வழங்க வேண்டும்.
     மண்பாண்டத் தொழிலாளர்களுக்காக மழைக்காலங்களில் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.4,000-த்தை, ரூ.5,000-மாக உயர்த்தி, மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அத்தனை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai