சுடச்சுட

    

    மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரியில் 204 யூனிட் ரத்ததானம்

    By ராசிபுரம்,  |   Published on : 27th September 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 204 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது.
     கல்லூரி நிர்வாகம், சேலம் வாசன் ஐ கேர், கரூர் ரெயின்போ ரத்தவங்கி ஆகியன இணைந்து முகாமை நடத்தின. கல்லூரித் தலைவர் எம்.மணி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார்.
     முதல்வர் டி.பரிதிமாற் கலைஞன் வரவேற்றார். துணை முதல்வர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், ஒட்டுநர்கள் கண் பரிசோதனை மேற்கொண்டு, ரத்ததானம் செய்தனர். முகாமில் கல்லூரி மாணவர்கள் 204 யூனிட் ரத்தம் தானம் செய்தனர். கண்தானம், ரத்ததானத்தின் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. என்எஸ்எஸ்., ஒய்ஆர்சி அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai