சுடச்சுட

    

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி: அதிமுக-வில் தலைவர் உள்பட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு

    By நாமக்கல்,  |   Published on : 27th September 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுகவில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட இப்போதைய தலைவர் உள்பட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
     நாமக்கல் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
     வார்டு வாரியாக வேட்பாளர்கள் விவரம்: 1-ஆவது வார்டு பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி செயலர் பி.மாதேஸ்வரன், 2-ஆவது வார்டு, இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.ராஜ், 3-ஆவது வார்டு திருச்செங்கோடு ஒன்றியம் புதுôர் மேடு கிளைக் கழகச் செயலர் எ.மாது என்ற மாதையன், 4-ஆவது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எ.வைரம் தமிழரசி, 5-வது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊôராட்சி வார்டு உறுப்பினர் எம்.ராணி, 6-ஆவது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் க.சந்திரசேகர், 7-ஆவது வார்டு ராசிபுரம் ஒன்றிய மகளிரணி செயலர் ஏ.பாலாமணி.
     8-ஆவது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.கலாவதி. 9-ஆவது வார்டு கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சித் தலைவர் எஸ்.சந்திரன், 10-ஆவது வார்டு கரையான்புதூர் என். மாகேஸ்வரன், 11-ஆவது வார்டு புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் எ.பிரபாவதி, 12-ஆவது வார்டு நாமக்கல் ஒன்றிய கிளைக் கழக மேலமைப்புக்குழு உறுப்பினர் பி.செந்தமிழ்செல்வி, 13-ஆவது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கே.காந்திமுருகேசன், 14-ஆவது வார்டு மாவட்ட துணைச் செயலர் கே.இன்பத்தமிழரசி, 15-ஆவது வார்டு தலைமைக் கழகப் பேச்சாளர் ப.சரஸ்வதி, 16-ஆவது வார்டு விட்டமநாயக்கன்பட்டி ரீத்தா பழனிசாமி, 17-ஆவது வார்டு மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் ஆர்.சாரதா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai