சுடச்சுட

  

  3,553 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்: முதல் நாளில் 202 பேர் மனு தாக்கல்

  By நாமக்கல்,  |   Published on : 27th September 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 3,553 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
   வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான திங்கள்கிழமை மாவட்டத்தில் 202 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
   நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைப் பொறுத்த வரையில் 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 172 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 322 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,595 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,106 பதவி இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
   இதேபோல் 5 நகராட்சிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், 19 பேரூராட்சிகளில் 294 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமாக 3,553 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 197 பேர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் என மொத்தம் 202 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai