Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு

    By நாமக்கல்,  |   Published on : 28th September 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் செவ்வாய்க்கிழமை பெறப்பட்டன.
     மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிழ்ச்சிக்கு கட்சி மேலிடப்பார்வையாளர் நவீன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரா.செழியன் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.
     நாமக்கல் நகர்மன்ற தற்போதைய உறுப்பினர் ஷேக் நவீத், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் குமரன் ஆகியோர் நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
     மேலும், காங்கிரஸ் கட்சியினர் பலரும் பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, உரிய கட்டணத்தைச் செலுத்தி மனுக்களை அளித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ.சித்திக், நகர காங்கிரஸ் தலைவர் மோகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai