சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் பணி: ஆட்சியர் ஆய்வு

  By நாமக்கல்  |   Published on : 28th September 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் நகராட்சி, எருமப்பட்டி மற்றும் மோகனூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் பெறுதல், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
   உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
   நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் மற்றும் பல்வேறு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
   நாமக்கல் நகராட்சி அலுவலகம், ரெட்டிபெட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மோகனூர் பேரூராட்சி, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆட்சியர் நேரில் சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, திப்ரமாதேவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் மோகனூர் ஆர்.சி.பேட்டப்பாளையம் புனித செசிலி ஆர்.சி.நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   ஆய்வின்போது வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக மேற்கொள்வதோடு, உள்ளாட்சித் தேர்தலை நாமக்கல் மாவட்டத்தில் மிக சிறப்பாக நடத்தி முடித்திட அனைத்து அலுவலர்களும் தேர்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி முனைப்போடு பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
   ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் செ.பழனியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai