சுடச்சுட

    

    ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

    By ராசிபுரம்,  |   Published on : 28th September 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்களிடம் செவ்வாய்க்கிழமை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
     நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட 15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் மொத்தம் 17 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள 17 வார்டுகளில் 10 வார்டுகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் இருந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 6-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் க.சந்திரசேகரன், ராசிபுரம் ஒன்றியத்தில் இருந்து 7-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.பாலமணி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் இருந்து 8-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.கலாவதி ஆகியோர் அந்தந்த தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
     நாமக்கல் எம்பி., பி.ஆர்.சுந்தரம், ஒன்றிய செயலர்கள் எஸ்.காளியப்பன், இ.கே.பொன்னுசாமி, எஸ்.பி.தாமோதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai