குமாரபாளையம் அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
By குமாரபாளையம், | Published on : 28th September 2016 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குமாரபாளையம் அருகே கணவனுடன் வீடு திரும்பிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (59). இவரது மனைவி சம்பூரணம் (57). இவர்கள் இருவரும் முனியப்பன் கோயிலிலிருந்து குமாரபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
ஆனங்கூர் சாலையில் பாலமரத்து முனியப்பன் கோயில் அருகே சென்றபோது வேகமாக மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், சம்பூரணம் அணிந்திருந்த 7 பவுந் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.