சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

  By நாமக்கல்,  |   Published on : 28th September 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த தற்போதைய மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்பட 17 பேர் வேட்புமனுக்களை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.
   தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 என இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர், நாமக்கல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தற்போதைய தலைவர் கே.காந்திமுருகேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் என 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
   கட்சியின் கட்டளைப்படி, அவர்கள் 17 பேரும் செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
   1வது வார்டு பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி செயலர் பி.மாதேஸ்வரன், 2வது வார்டு, இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.ராஜ் இருவரும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3வது வார்டு திருச்செங்கோடு ஒன்றியம், புதுôர் மேடு கிளை செயலர் எ.மாது என்ற மாதையன் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 4வது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எ.வைரம் தமிழரசி எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 5வது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊôராட்சி வார்டு உறுப்பினர் எம்.ராணி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 6வது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் க.சந்திரசேகர் வெண்ணந்தூó ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 7வது வார்டு ராசிபுரம் ஒன்றிய மகளிரணி செயலர் எ.பாலாமணி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8வது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.கலாவதி நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்தனர்.
   9வது வார்டு கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சித் தலைவர் எஸ்.சந்திரன் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10வது வார்டு கரையான்புதூர் என். மாகேஸ்வரன் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 11வது வார்டு புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் எ.பிரபாவதி புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12வது வார்டு நாமக்கல் ஒன்றிய கிளை மேலமைப்புக் குழு உறுப்பினர் பி.செந்தமிழ்செல்வி நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்தனர்.
   13வது வார்டு இப்போதுள்ள மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.காந்திமுருகேசன் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 14வது வார்டு மாவட்ட துணைச் செயலர் கே.இன்பத்தமிழரசி கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 15வது வார்டு தலைமைக் கழகப் பேச்சாளர் ப.சரஸ்வதி மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 16வது வார்டு விட்டமநாயக்கன்பட்டி ரீத்தா பழனிசாமி நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 17வது வார்டு மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் ஆர்.சாரதா எருமபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai