சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் 2 நாள்களில் 337 வேட்பு மனு தாக்கல்

    By நாமக்கல்,  |   Published on : 28th September 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் 2 நாள்களில் 337 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
     உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 3 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
     மாவட்டத்தில் 26 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 202 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 27 ஆம் தேதி 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2 நாள்களிலும் மொத்தமாக 337 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
     இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 299, ஊராட்சித் தலைவர் பதவிக்கு 8, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 2, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
     நகர்மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை ஒரு வேட்பு மனு கூட பெறப்படவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai