Enable Javscript for better performance
பரமத்தி, கபிலர்மலையில் அதிமுகவினர் வேட்புமனுத் தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி, கபிலர்மலையில் அதிமுகவினர் வேட்புமனுத் தாக்கல்

    By பரமத்திவேலூர்,  |   Published on : 28th September 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்த காந்திமுருகேசனும், கபிலர்மலை முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த இன்பத்தமிழரசியும் செவ்வாய்க்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
     நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்தவர் காந்திமுருகேசன். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 10-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காந்திமுருகேசன் தற்போது மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு பரமத்தி ஒன்றியம் 13-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இதற்கான மனுவை பரமத்தி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் நமச்சிவாயத்திடம் தாக்கல் செய்தார்.
     உடன், கபிலர்மலை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மணி,பரமத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் சுகுமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
     இதேபோல, நாமக்கல் மாவட்ட கபிலர்மலை ஒன்றியம், 14-வது வார்டில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கான பதவிக்கு கபிலர்மலை முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த இன்பத்தமிழரசி தனது வேட்பு மனுவை கபிலர்மலை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் விஜயகுமாரிடம் தாக்கல் செய்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai