சுடச்சுட

    

    பொதுமக்கள் புகார் தெரிவிக்க காவல் துறைக்கு இலவச கட்செவி அஞ்சல் சேவை: தனியார் செல்லிடப்பேசி நிறுவனம் வழங்கியது

    By நாமக்கல்,  |   Published on : 28th September 2016 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட பொதுமக்கள், புகாரினை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிப்பதற்காக ஐடியா செல்லிடப்பேசி நிறுவனம் இலவசமாக 95144 00100 என்ற கட்செவி அஞ்சல் எண்ணை நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு அளித்துள்ளனர்.
     ஐடியா செல்லிடப்பேசி நிறுவன துணைப் பொது மேலாளர் பிரவின்சேகர் மற்றும் நாமக்கல் மாவட்ட விற்பனை பிரிவு நிர்வாகி சட்டநாதன் ஆகியோர் இலவச கட்செவி அஞ்சல் இணைப்பை காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் வழங்கினர்.
     காவல் துறை சம்மந்தப்பட்ட குறைகளை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி புகாராகவும் கொடுக்கலாம் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏதேனும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடைபெற்றாலும் இந்த கட்செவி அஞ்சல் எண்ணில் தொடர்பு கொண்டு ரகசிய தகவல்களாகவும் அனுப்பி வைக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
     இந்த எண்ணில் புகார் தகவல் தெரிவிப்பது தொடர்பாக பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையம் மற்றும் இதர போக்குவரத்து நிறைந்த இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குற்றங்கள் தொடர்பான ரகசிய தகவல்களை 95144 00100 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai