சுடச்சுட

    

    பரமத்திவேலூர் வட்டத்தில் வரத்துக் குறைவால் மரவள்ளிக் கிழங்கின் விலை கடந்த வாரத்தைவிட ரூ.500 வரை உயர்ந்தது. அதேவேளை, சிப்ஸ் தயார் செய்ய பயன்படுத்தப்படும் மரவள்ளிக் கிழங்கின் விலை ஆயிரம் ரூபாய் வரை சரிவடைந்துள்ளது.
     பரமத்திவேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி,பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 500 வரையில் விற்பனையானது. சிப்ஸ் தயார் செய்வதற்காக வாங்கப்படும் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரம் வரையில் விற்பனையானது. தற்போது மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ.9 ஆயிரம் வரையிலும், சிப்ஸ் தயார் செய்வதற்காகப் பயன்படும் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்துக்கும் விற்பனையானது. மரவள்ளிக் கிழங்கின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாகவும், பண்டிகை காலங்கள் அதிக அளவில் இல்லாததால் சிப்ஸ் தயார் செய்ய பயன்படும் மரவள்ளிக் கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai