சுடச்சுட

    

    ரூ.60 லட்சம் பொருள்களுடன் லாரி கடத்தல்: ஓட்டுநர் கைது

    By நாமக்கல்,  |   Published on : 28th September 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பொருள்களுடன் லாரியை கடத்திய ஓட்டுநரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கடத்தப்பட்ட லாரியும் மீட்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
     நாமக்கல்லைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் பாலாஜி (37). அவருக்குச் சொந்தமான லாரி தனியார் பார்சல் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது. சென்ற 24ஆம் தேதி அந்த லாரி ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பொருள்களுடன் சேலத்தில் இருந்து திருச்சிக்குப் புறப்பட்டுள்ளது. லாரியை ரங்கநாதன் (61) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
     நாமக்கல் அருகே வந்தபோது லாரி கடத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பாக லாரி உரிமையாளர் பாலாஜி, நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்படி, காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசராணை நடத்தினர். விசாரணையில் ஓட்டுநர் ரங்கநாதன் லாரியை கடத்தி நாடகமாடியது தெரியவந்தது. மேலும் நான்கு லாரிகளுக்கு உரிமையாளராக ரங்கநாதன் இருந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்போது அவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். மேலும், தொழிலில் ஏற்பட்ட கடனை அடைக்க ரூ. 60 லட்சம் மதிப்புள்ள சரக்குடன் லாரியைக் கடத்தியுள்ளார் என்பது உள்ளிட்ட விவரம் தெரியவந்தது. அதையடுத்து, ரங்கநாதனைக் கைதுசெய்த காவல் துறையினர், லாரியையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai