சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று விருப்ப மனு விநியோகம்

    By நாமக்கல்,  |   Published on : 28th September 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கப்பட உள்ளது.
     இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் மணிமாறன் தெரிவித்தது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஹோட்டல் அன்னபூர்ணா கூட்ட அரங்கில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
     இக் கூட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வழங்கப்பட உள்ளது.
     போட்டியிட விரும்புபவர்கள் கூட்டத்தில் பங்கேற்று, விருப்ப மனுக் கட்டணம் ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.
     இக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம் நிர்வாகிகள், போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai