Enable Javscript for better performance
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: பாஜகவினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     இந்து இயக்கங்களின் தலைவர்கள் படுகொலையைக் கண்டித்து புதன்கிழமை தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நாமக்கல் டி.எஸ்.பி. பொன்.தாமரைசெல்வன் தலைமையிலான போலீஸார் பாஜகவினரை கைது செய்தனர்.
     இதில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, தேசியகுழு உறுப்பினர் வழக்குரைஞர் மனோகரன் மற்றும் மகளிர் அணியினர் என மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai