சுடச்சுட

    

    இடும்பன் குளம் தூர்வாரல் ஆலோசனைக் கூட்டம்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 29th September 2016 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்தை தூர்வாருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பரமத்தி அரிமா சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     பரமத்தி அருகே சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இடும்பன் குளம் உள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து வரும் தண்ணீர் திருமணி முத்தாறாக பல்வேறு பகுதிகளைக் கடந்து பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்தை வந்தடைகிறது. இக்குளம் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு காவிரியாற்றில் கலக்கிறது. இதனாலயே அவ்வூருக்கு நன்செய் இடையாறு என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
     தற்போது இடும்பன் குளம் முழுவதும் கருவேல மரங்களால் சூழப்பட்டு இருப்பதால், மழை மற்றும் வெள்ளக் காலங்களில் திருமணி முத்தாறு மூலம் வரும் தண்ணீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. இந்த இடும்பன் குளம் தூர் வாரப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்.
     இதுகுறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை தூர்வாரப்படாமலேயே உள்ளது. இதனால் சமூக ஆர்வலர்களும், பரமத்தி அரிமா சங்கத்தினர் மற்றும் நீர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் இணைந்து இக்குளத்தை தூர்வாருவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
     இக் கூட்டத்தில் பரமத்தி அரிமா சங்க மாவட்டத் தலைவர் காந்தி, சமூக ஆர்வலர்கள் ஜெய்குமார், ராம்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai