சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள்: 3-ஆவது நாளாக ஆட்சியர் ஆய்வு

  By நாமக்கல்,  |   Published on : 29th September 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் 3-ஆவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார்.
   உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் மற்றும் பல்வேறு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகராட்சி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வரகூராம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், ஆலாம்பாளையம் பேரூராட்சி அலுவலகம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பள்ளிபாளையம் நகராட்சி, குமாரபாளையம் நகராட்சி, படைவீடு பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆட்சியர் நேரில் சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் ஆய்வு செய்து வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
   நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி உள்ளாட்சித் தேர்தலை மிக சிறப்பாக நடத்தி முடித்திட அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென உத்தரவிட்டார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai