Enable Javscript for better performance
என்.சி.சி. மாணவர்கள் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மண்டல தலைமை தளபதி லெப்டினட் கர்னல் சுனில் தாமோதரன் உத்தரவின் பேரில், தூய்மை இந்தியாவின் ஒரு பகுதியாக தூய்மை செய்யும் பணி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.
     கல்லூரி முதல்வர் முனைவர் த.சுமதி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் ஆர்.சிவக்குமார், வரலாற்றுத் துறை தலைவர் இரா.சேகரன், ஆங்கிலத் துறை தலைவர் அ.முத்துக்குமார், உடல்கல்வித் துறை ப.பிரகாஷ், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ப.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் தூய்மை இந்தியா பணியை பல்வேறு இடத்தில் மேற்கொண்டனர். மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தூய்மை அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai