சுடச்சுட

    

    காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி மீட்பு

    By குமாரபாளையம்,  |   Published on : 29th September 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்ததில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி புதன்கிழமை மீட்கப்பட்டார்.
     பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், குமாரபாளையம் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையின் காவிரி ஆற்றின் பாலத்துக்கு அருகே சென்ற சுமார் 80 வயதான மூதாட்டி ஆற்றுக்குள் தவறி விழுந்தார்.
     வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி, அப்பகுதியில் இருந்த செடிகளைப் பிடித்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை பொதுமக்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. அதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
     நிலைய அலுவலர் எஸ்.பி.பொன்னாமலை தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினர், பொதுமக்கள் உதவியுடன் மூதாட்டியை மீட்டனர். விசாரணையில், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் (80) என்பது தெரிந்தது. இதையடுத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர்அனுப்பி வைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai