சுடச்சுட

    

    சிறந்த தன்னார்வலராக பாவை கல்லூரி மாணவர் தேர்வு

    By ராசிபுரம்,  |   Published on : 29th September 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்ணா பல்கலைக்கழக சிறந்த தன்னார்வலராக பாவை கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
     அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆண்டுதோறும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் மற்றும் திட்ட அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலகு, திட்ட அலுவலர் மற்றும் தன்னார்வலர்களுக்கான விருதினை வழங்கிக் கெüரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த தன்னார்வலர்களுக்கான விருதை பெறும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.
     இவர்களில் சிறந்த சேவையைப் பாராட்டும் வகையில், சிறந்த தன்னார்வலர்களுக்கான விருதுக்கு 13 மாணவர்கள், 12 மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், பாவை பொறியியல் கல்லூரியின் இயந்திர மின்னனுவியல் துறையைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர் ஜெகன் தேர்வு செய்யப்பட்டார்.
     இவர் ரத்த தான முகாம்கள், மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு முகாம்கள், மருத்துவ முகாம்கள், சிறப்பு முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.
     இதற்கான பரிசளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. விருதை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் டீன் நாராயணசாமி, பதிவாளர் கணேசன், கூடுதல் பதிவாளர் செல்லதுரை உள்ளிட்டோர் வழங்கினர். இவர்களுடன் மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, நாட்டு நலப்பணித் திட்டம் தொடர்பு அலுவலர்கள் ராஜசேகரன், ரமேஷ், யுவராஜ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர்கள் கே.செந்தில், கே.கே.ராமசாமி, கல்லூரியின் முதல்வர் பிரேம்குமார் திட்ட அலுவலர் ரத்னகுமார், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai