சுடச்சுட

  

  "தீபாவளி விற்பனைக்காக பலகாரம் செய்வோருக்கு உரிமம் கட்டாயம்'

  By நாமக்கல்,  |   Published on : 29th September 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்பவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மு.கவிக்குமார் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்யப்படும் இடங்களான பேக்கரி, ஹோட்டல், சில்லறைக் கடைகள், திருமண மண்டபம், இதர பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். இதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களான மைதா, நெய், எண்ணெய், சர்க்கரை, டால்டா உள்ளிட்டவை தரமானதாக இருக்க வேண்டும்.
   மூலப்பொருள்களுடைய பொட்டலம் மற்றும் டின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரி, பேட்ச் எண் ஆகியன இடம் பெற்றிருக்க வேண்டும்.
   அதுபோல், ஒரு முறை உபயோகித்த எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. பாதுகாப்பான குடிநீரை மட்டுமே தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். தயாரித்த இனிப்பு மற்றும் காரவகைகள் சுகாதாரமான முறையில் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து மூடி விற்பனை செய்ய வேண்டும்.
   பால் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத இனிப்பு வகைகள் தனித்தனியாக சேமித்து, தனித்தனி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை விட கூடுதலான வண்ணங்களை சேர்க்கக் கூடாது.
   இனிப்பு கார வகைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபடுவோர் கையுறை, தொப்பி, மேலங்கி ஆகியவை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். நகங்கள் சுத்தமாக வெட்டி தன் சுத்தம் பேண வேண்டும்.
   விற்பனை செய்யப்படும் அனைத்து இனிப்பு மற்றும் கார வகைகளின் பொட்டலங்களின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முழு முகவரி ஆகியவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai