சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், திருச்செங்கோடு அருகே கூத்தம்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட மேட்டுப்புதூர் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு முகாம் தொடங்கியது.
   இதில் விநாயகர் மற்றும் அம்மன் கோயில்களில் தூய்மைப் பணி, கிராம சாலையை சீரமைத்தல், மரக்கன்று நடுதல், பொது குடிநீர்க் குழாய் சுற்றுப்புறத் தூய்மை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புதல், மருத்துவமனை வளாகம் தூய்மை, எய்ட்ஸ் மற்றும் புகையிலை விழிப்புணர்வு பேரணி, நூலகம், மட்டுப்புதூர் சந்தை, பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை தூய்மை செய்தல் போன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபடவுள்ளனர். தினமும் மாலை 5 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
   நிறைவு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆ.ராமு மற்றும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai