சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் 3 நாள்களில் 1,326 பேர் வேட்பு மனு தாக்கல்

    By நாமக்கல்  |   Published on : 29th September 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட கடந்த 3 நாள்களில் 1,326 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
     நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் என 5 நகராட்சிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 153 வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. அதுபோல், 19 பேரூராட்சியில் 294 உறுப்பினர், 15 ஊராட்சி ஒன்றியத்தில் 172 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன.
     மேலும், 322 ஊராட்சிகளில் 322 ஊராட்சித் தலைவர் மற்றும் 2,595 ஊராட்சி உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதுபோல், மாவட்ட ஊராட்சிக் குழுவில் 17 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அதன்படி, இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 3,553 பதவியிடங்கள் உள்ளன.
     இவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் 26-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
     3-ஆம் நாளான புதன்கிழமை ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 14, ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 134, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 816, நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 11 பேர், பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 14 பேர் என ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 989 பேர் மனு தாக்கல் செய்தனர். மேலும், கடந்த 3 நாள்களில் 1,326 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai