சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் பகுதியில் கோரைகளின் விலை உயர்வு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 29th September 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் கோரைகளின் விலை உயர்ந்துள்ளதால், கோரை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான பொன்மலர்பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், எல்லைமேடு, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் கோரைகளை ஓமலூர், சேலம், மேச்சேரி, முசிறி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.
     புதன்கிழமை 54 இஞ்ச் உயரம் கொண்ட கோரை கட்டு ஒன்று ரூ.1,100-க்கும், 50 இஞ்ச் உயரம் கொண்ட கோரை கட்டு ஒன்று ரூ.800-க்கும், இரண்டரை அடி உயரமுள்ள கோரை கட்டு ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது. தற்போது கோரையின் உற்பத்தி குறைந்துள்ளதால், கோரையின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
     பரமத்தி வேலூரில் வெற்றிலை, வாழை மற்றும் கொப்பரைத் தேங்காய்க்கென தனியார் மற்றும் அரசு சார்பில் ஏலச் சந்தைகள் உள்ளன. ஆனால், இதுவரை கோரைக்கென தனியாக ஏலச் சந்தைகள் அமைக்கப்படாமலே உள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கு அதிகளவில் கோரைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், கோரைகளுக்கென ஏலச் சந்தை அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai