Enable Javscript for better performance
பள்ளிப் பருவமும், கற்ற கல்வியும் தான் வாழ்க்கையில் இனிமையானது: சி.சைலேந்திரபாபு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிப் பருவமும், கற்ற கல்வியும் தான் வாழ்க்கையில் இனிமையானது: சி.சைலேந்திரபாபு

    By நாமக்கல்,  |   Published on : 29th September 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கும் போது, பள்ளிப் பருவமும், கற்ற கல்வியும் தான் வாழ்க்கையில் இனிமையானதாக இருக்கும் என்றார் காவல் துறை கூடுதல் இயக்குநர் சி.சைலேந்திரபாபு.

     திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "சாதிக்க ஆசைப்படு' என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: பள்ளிப் பருவத்தை கடினமாக எண்ணாமல், இனிமையானதாக எண்ணி பயில வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் மற்றும் துன்ப நிலைகளைக் கடந்து பல ஆண்டுகளுக்கு பின் திரும்பிப் பார்த்தால் பள்ளிப் பருவமும், கற்ற கல்வியும் தான் மிக இனிமையானதாகவும், எளிமையானதாகவும் தெரியும்.
     மாணவர்கள் படிக்கும்போதே போதிய அனுபவ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையுள்ள மாணவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமை வேண்டும்.
     கற்கையில் கசப்பு, கற்றபின் இனிப்பு என்பதற்கேற்றாற்போல், முன்னேறுவதற்கு எதிராக இருக்கும் தடைக் கற்களை தூக்கி எறிய வேண்டும், மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்கி சாதிக்க வேண்டும். மேலும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளை தயங்காமல் எழுத வேண்டும் என்றார்.
     கல்லூரி முதல்வர் கே.சாமிதுரை வரவேற்றார். வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் முருகன், செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.குணசேகரன், தாளாளர் டி.ஓ. சிங்காரவேல், நிர்வாக அறங்காவலர்கள் எஸ்.ராமலிங்கம், எம்.முத்துசாமி, அறங்காவலர்கள் கே.எஸ்.பழனியப்பன், டி.பி.ஞானசேகரன், என். சீராளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai