சுடச்சுட

    

    மனைவி இறந்த வேதனை: குழந்தைகளுடன் இளைஞர் தற்கொலை முயற்சி

    By நாமக்கல்,  |   Published on : 29th September 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனைவி இறந்த வேதனையில், இரண்டு குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த இளைஞர் உள்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     நாமக்கல் அருகே தூசூரைச் சேர்ந்தவர் சரவணன் (27). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய இவரது மனைவி கனகவல்லி, கடந்த 3 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாராம். அப்போது அவர் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இவர்களுக்கு லாவண்யா (6), நரேஷ் (4) என இரு குழந்தைகள் உள்ளனர்.
     இந்நிலையில் மனைவி இறந்த வேதனையில் இருந்த சரவணன் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை காலை தனது இரு குழந்தைகளுடன் கூலிப்பட்டியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சரவணன், குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மாத்திரையை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai