சுடச்சுட

    

    மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தொழில் பூங்கா அமைக்க வலியுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 29th September 2016 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
     நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 46-ஆவது மகாசபைக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஆர்.வாங்கிலி தலைமை வகித்தார். செயலர் கே.அருள், பொருளர் பி.சீரங்கன் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். கூட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, செயலர் தன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வட்டச் சாலை பணியினை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நாமக்கல்லில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும்.
     மாவட்ட தலைநகரமான நாமக்கல்லில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். லாரி தொழிலை சார்ந்தவர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்தி, லாரி உரிமையாளர்களுக்கும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்னேற்றத்துக்கும் உதவி செய்திட வேண்டும்.
     நாமக்கல்-பரமத்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ நகரில் தார்ச் சாலை, மின்சார வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாமக்கல் நகரில் லாரிகளை நிறுத்துவதற்கு லாரி ஸ்டேண்ட் இல்லாததால் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய லாரி ஸ்டேண்ட் அமைக்க வேண்டும்.
     நாமக்கல் நகரின் எதிர்கால போக்குவரத்து சிரமங்களைத் தவிர்க்க பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.
     இதில், சங்க துணைத் தலைவர் எஸ்.சுப்புரத்தினம், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் தங்கவேல், செயலர் கார்த்திக், நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன், ஆட்டோநகர் அசோசியேசன் தலைவர் பழனிச்சாமி, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கே.நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க துணைச் செயலர் ஆர்.ஆனந்தன் நன்றி கூறினார்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai