சுடச்சுட

  

  "விளையாட்டில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும்'

  By நாமக்கல்,  |   Published on : 29th September 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விளையாட்டில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும் என போக்குவரத்துத் துறை இணை ஆணையர் எஸ்.வேலுச்சாமி கூறினார்.
   நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17-ஆவது விளையாட்டு நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
   கல்லூரி தாளாளர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ந.ராஜவேல் வரவேற்றார். உடல்கல்வி துறைத் தலைவர் அ.ஈஸ்வரமூர்த்தி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.
   சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போக்குவரத்துத் துறை இணை ஆணையர் எஸ்.வேலுசாமி பேசியது: கல்வி நிலையான செல்வம், விளையாட்டு மாணவர்களின் மன உறுதியை வலுப்படுத்தம். இந்த இரண்டும் மனிதனை சிறந்த சிற்பியாக வளப்படுத்திக் கொள்வதற்கு உன்னத களமாக அமைகிறது.
   விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதோடு நாட்டுக்கும் பெருமை கிடைக்கிறது. விளையாட்டில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும். எத்தனை தோல்வி, இடையூறு வந்தாலும் லட்சியம் ஒன்றுதான் இலக்கு என்று இருக்க வேண்டும். முயற்சியை இடையில் நிறுத்தக் கூடாது என்றார்.
   முன்னதாக பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை என்ற நான்கு குழுக்களாக மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெள்ளை அணி பெற்றது, இந்த அணிக்கு சுழல்கேடயம் வழங்கப்பட்டது. இதில், செயலர் கவீத்ரா நந்தினிபாபு, நிர்வாக இயக்குநர் கி.சி.அருள்சாமி, துணை முதல்வர்கள் கே.கே.கவிதா, ப.தாமரைச்செல்வன், மு.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai