சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

  By நாமக்கல்,  |   Published on : 30th September 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறையினர் அக்டோபர் 5ஆம் தேதி விருப்ப கடிதம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
   தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ள முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் மற்றும் இதரப் படை பிரிவு பணியாளர்கள் நாமக்கல் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் விருப்ப மனுக்களை அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai