சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: விசிகவினர் விருப்ப மனு

    By நாமக்கல்,  |   Published on : 30th September 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக, பல்வேறு பதவிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் நீதிநாயகம் வெளியிட்ட செய்தி: வரும் அக்டோபர் 17,19ஆம் தேதிகளில் இருகட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம வார்டு உறுப்பினர் பதவி நீங்கலாக மற்ற பதவிகளான மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai