சுடச்சுட

  

  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோருக்கு தொழில் சான்று வழங்கக் கோரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 30th September 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல்லில் வெவ்வேறு தொழில் செய்யும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தொழில் சான்று, சரிபார்ப்பு சான்று வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட கல் உடைத்து கட்டடம் கட்டும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கே.பழனிவேல், நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பல தொழில்கள் செய்து வருகின்றனர். தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய ஒரு குடும்பத்துக்கு ஒரு நபருக்கு மட்டும் தான் தொழில் சான்று அல்லது சரிபார்ப்பு சான்று வழங்கப்படுகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் வெவ்வேறு தொழில் செய்தாலும் சான்று பெறவோ, நலவாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெறவோ வழி இல்லை.
   தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய குடும்பத்துக்கு ஒருவருக்கு மட்டும் தான் சான்று வழங்க வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளதாக, கொண்டிசெட்டிப்பட்டி, நல்லிபாளையம் வருவாய் கிராமங்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உறுப்பினர்களிடம் தெரிவிக்கின்றனர். எனவே, வெவ்வேறு தொழில் செய்யும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை பெற தொழில் சான்று, சரிபார்ப்பு சான்று வழங்க வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai