சுடச்சுட

    

    கபிலக்குறிச்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஏலம்: தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

    By பரமத்திவேலூர்,  |   Published on : 30th September 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கபிலக்குறிச்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற ஏலத்தை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
     பரமத்திவேலூர் வட்டம்,கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சித் மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
     இந்தநிலையில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட திடுமல்,திடுமல் கவுண்டம்பாளையம்,குரும்பலமகாதேவி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளுக்கான தலைவர் தேர்வுக்காக அந்தந்த ஊராட்சிகளில் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் கூட்டினர். இந்தக் கூட்டத்தில் போட்டியின்றி தலைவர் தேர்வு செய்யப்படுவதாகக் கூறி, கூட்டத்தில் தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டதாம்.
     மேலும், கபிலக்குறிச்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கபிலர்மலை கூத்தாடி மாரியம்மன் கோயிலில் நடைபெறுவதாக புதன்கிழமை மாலை தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் சிலர் கோயில் முன் கூடினர். கூட்டத்தில் ஏலம் மூலம் தலைவர் பதவியைத் தேர்வு செய்வதாகவும், அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொள்வதாகவும் முடிவு செய்வதாக இருந்ததாம்.
     இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலரும்,கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான கந்தசாமி மற்றும் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த நிகழ்வு தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமானது. எனவே, தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் எனக் கூறி, அங்கிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai