Enable Javscript for better performance
கொப்பரைத் தேங்காயின் விலை சரிவு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்திவேலூர்,வெங்கமேடு பகுதியில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காயின் விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
     பரமத்திவேலூர் வட்டத்தில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை ஒவ்வொரு வியாழக்கிழமையும் பரமத்திவேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு, தரத்துக்கு தகுந்தாற்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. வியாழக்கிழமை ஏலம் எடுப்பதற்கு திருச்செங்கோடு, ஈரோடு, சிவகிரி, கொடுமுடி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
     கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2 ஆயிரத்து 326 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.62.76 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.58.89 பைசாவுக்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.61.21 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 312-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
     வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4 ஆயிரத்து 328 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.57.39 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.55.69 பைசாவுக்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.56.89 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 832-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கொப்பரைத் தேங்காயின் வரத்து அதிகரித்ததால், கொப்பரையின் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai