Enable Javscript for better performance
தந்தையால் விஷம் கொடுக்கப்பட்ட குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் தந்தையால் குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை வியாழக்கிழமை காலை உயிரிழந்தது.
     நாமக்கல் அருகே தூசூரைச் சேர்ந்தவர் சரவணன் (27). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கனகவல்லி, அங்கன்வாடி பணியாளராகப் பணியாற்றிய இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவர் பணிச் சுமையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.
     இவர்களுக்கு லாவண்யா (6), நரேஷ் (4) என இரு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்த துக்கத்தில் மீளாத சரவணன் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந் நிலையில் புதன்கிழமை காலை சரவணன், குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு சரவணனும் குடித்துள்ளார்.
     உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரேஷ் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai