சுடச்சுட

    

    நாமக்கல், ராசிபுரம் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவி: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கூட்டணி வார்டு விவரம் அறிவிப்பு

    By நாமக்கல்,  |   Published on : 30th September 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு விவரங்களை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலர் பார்.இளங்கோவன் வெளியிட்டார்.
     நாமக்கல் நகராட்சி: 1.கே.மல்லிகை, 2.எம்.அருள்குமார், 3.எஸ்.சசிகலா செüந்திரபாண்டியன், 4.எம்.கிருஷ்ணமூர்த்தி, 5.திமுக கூட்டணி- காங்கிரஸ், 6.செ.செல்வராசு, 7.எம்.சின்னுசாமி, 8.இந்திரா ராமலிங்கம், 9.எஸ்.பி.அமுதா, 10.செ.பூபதி, 11.சையத் முஸ்தபா, 12. பி.சந்திரா, 13.இ.ஷமீம், 14.டி.டி.சரவணன், 15.டி.செல்வராஜ், 16.என்.ராஜவேல், 17.மலர்கொடி, 18.டி.கருப்பையா, 19.கே.கலைச்செல்வி, 20.சாந்தி மாயவன், 21.செல்லம்மாள், 22.கே.சரவணன், 23.எஸ்.லீலாவதி, 24.எஸ்.சந்திரா, 25.மு.ஜெயமணி, 26.பா.புவனேஸ்வரி, 27. ஆர்.பாரதி, 28.பி.நந்தினிதேவி, 29.சி.மணிமாறன், 30.சகுந்தலா கருணகரன், 31. எம்.சாந்தி, 32.ஆர்.அழகப்பன், 33.எம்.சந்தியா, 34.எஸ்.சரோஜா, 35.கே.பழனிசாமி, 36.பி.ஸ்ரீதேவி, 37.எஸ்.செல்வகுமார், 38.ப.ராணி, 39.ஆர்.மாதேஷ்.
     ராசிபுரம் நகராட்சி: 1.எம்.மஞ்சுளா, 2.ஆர்.சாந்தி, 3. என்.ஆர்.சங்கர், 4. கூட்டணி கட்சிóக்கு ஒதுக்கீடு, 5.எஸ்.சவுண்டப்பன், 6. பெ.சுசீலா, 7.திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை, 8.மா.சின்னுசாமி, 9.சி.பிரபாகரன், 10.டி.கார்த்திகேயன், 11.த.ராஜாமணி, 12.எஸ்.விஜயா,
     13.திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை, 14.அ.காதர்பாஷா, 15.எஸ்.ரங்கசாமி, 16.திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை, 17.க.அழகரசு, 18.ம.பிளவேந்திரராஜ், 19.கே.ராஜம்மாள், 20.ஏ.பாலு, 21.பி.மஞ்சுளா, 22.கே.சாந்தி, 23 .கே.ஆனந்தன், 24.என்.ஸ்ரீதேவி, 25.க.ரவிச்சந்திரன், 26.ஆர்.பிரபா, 27.கே.நிர்மலா.
     இதுபோல், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டு விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வார்டு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு என குறிப்பிட்டு எந்த வார்டும் ஒதுக்கப்படவில்லை.
     திமுகவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரா.செழியன் மற்றும் நிர்வாகிகள் திமுக மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவனைச் சந்தித்து வியாழக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் இந்த பட்டியல் மாற வாய்ப்புள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai