இளம்பெண் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

ராசிபுரம் அருகே இளம்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
Updated on
1 min read

ராசிபுரம் அருகே இளம்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் அருகே நாச்சிப்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி ரம்யா (20). இவர் நாச்சிப்பட்டியில் உள்ள புதுவாழ்வு திட்ட அலுவலகத்தில் தாற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப். 18-ஆம் தேதி வேலைபார்த்த அலுவலகத்தில் ரம்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 
போலீஸார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மகேஸ்வரன், ரம்யா கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் மகேஸ்வரனை கைது செய்தனர். நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, மகேஸ்வரனுக்கு ஆயுள்தண்டனை, ரூ.4,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com