நாளை பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம்

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் வருவாய் வட்டத்துக்கு ஒரு நியாயவிலைக் கடையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.
Published on

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் வருவாய் வட்டத்துக்கு ஒரு நியாயவிலைக் கடையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும், வருவாய் வட்டங்கள்தோறும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்
கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் வரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் வட்டம் வள்ளிபுரம், சேந்தமங்கலம் வட்டம் புதுக்கோம்பை, ராசிபுரம் வட்டம் கீழுர், கொல்லிமலை வட்டம் செம்மேடு, திருச்செங்கோடு வட்டம் போக்கம்பாளையம், குமாரபாளையம் வட்டம் ஒடப்பள்ளி, பரமத்தி வேலூர் வட்டம் நடந்தை ஆகிய 7 நியாயவிலைக் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதில் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை தொடர்பான திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம்.
மேலும் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை தெரிவித்தால் விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com