வேளாண் தொழில் தொடங்க இலவச பயிற்சி

வேளாண் தொழில் தொடங்க இலவசமாக அளிக்கப்படும் சிறப்பு பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

வேளாண் தொழில் தொடங்க இலவசமாக அளிக்கப்படும் சிறப்பு பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து கேர் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி பழனிச்சாமி வெளியிட்ட செய்தி: நாமக்கல் கேர் தொண்டு நிறுவனம் சார்பில் வேளாண்மை சார்ந்த பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு (வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, மீன்வளம், வனஇயல்) மற்றும் பிளஸ் 2 படிப்பில் வேளாண்மையை விருப்பப் பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு, வேளாண் தொழில் தொடங்க 2 மாத கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி, தங்கும் இடம், பயிற்சிக்கான சாதனங்கள் அனைத்தும் இலவசம்.
 இரண்டு மாத பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெறும் வசதி உண்டு. ஆண்களுக்கு 36 சதவீதமும், பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 44 சதவீதமும் மானியம் கிடைக்கும். வயது வரம்பு இல்லை. விருப்பமுள்ளவர்கள் கேர் தொண்டு நிறுவனம், 1931 முதல் தெரு, தில்லைபுரம், நாமக்கல் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443220095 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com