நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பால்குட ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையின்மையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மழை வேண்டியும் மற்றும் பொதுமக்கள் நன்மைக்காகவும் நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பால்குட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த பால் குட ஊர்வலத்தை நாமக்கல் எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பால்குட ஊர்வலமானது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்டு திருப்பாக்குளத் தெரு, கோட்டை சாலை வழியாக மீண்டும் ஆஞ்சநேயர் கோயிலை வந்தடைந்தது. பின்னர், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. அன்பழகன், நகராட்சித் துணைத் தலைவர் சேகர், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ராஜா, ஆஞ்சநேயர் கோயில் கண்காணிப்பாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல்லைச் சேர்ந்த பலர் பங்கேற்று மழை வேண்டி பால்குடம் எடுத்து வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.