ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், பொறியியல் மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சசிக்குமார் (23), தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.இ. படித்து வருகிறார். இவர் கல்லூரியை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது, வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி பேருந்து, பொன்குறிச்சி அருகேயுள்ள வளைவில் எதிரே வந்த சசிக்குமார் வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சசிக்குமார், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.