தருமபுரி அருகே மலைப் பகுதியில் குர்லா விரைவு ரயில் மீது பாறாங்கல் விழுந்ததாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பெங்களூருவிலிருந்து கோவைக்கு தினமும் செல்லும் குர்லா விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தருமபுரி தொப்பூர் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பக்கவாட்டில் இருந்து உருண்டு வந்த பாறாங்கல் ரயிலின் எஞ்சின் பகுதியில் பட்டு உடைந்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட பலத்த சத்தத்தை அடுத்து, அருகேயுள்ள காருவள்ளி ரயில் நிலையத்தில் ரயில் ரயில் நிறுத்தப்பட்டது. தகவலின்பேரில் தருமபுரி மற்றும் சேலத்தைச் சேர்ந்த ரயில்வே போலீஸார் மற்றும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பெரியஅளவில் சேதம் ஏதும் இல்லை. மழை நேரமாக இருந்ததால் பாறை உருண்டு விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.