சுடச்சுட

    

    தேர்வுப் பணி உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மாவட்டத் தலைவர் ராமு தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் புஷ்பராசு, மாவட்ட அமைப்புச் செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் மலர்க்கண்ணன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். மேல்நிலை பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு வழங்கப்படுவது போல் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
    பறக்கும் படை உறுப்பினர்களுக்கு தினப் படியாக ரூ.500 வழங்க வேண்டும்.
    தமிழகத்தில் பல பள்ளிகளில் மேல்நிலைத் தேர்வுகள் எழுதுபவர்களின் எண்ணிக்கை 1,000-த்துக்கும் மேல் உள்ளது. இப் பள்ளிகளில் ஒரு முதன்மை கண்காணிப்பாளர், 3 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் என 3 முதல் 4 தலைமையாசிரியர்களை நியமனம் செய்கின்றனர். இந்த நடைமுறையால் ஒரு முதன்மை கண்காணிப்பாளரே அனைத்துக்கும் பொறுப்பாகும் நிலை உள்ளது. இப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்க வேண்டும்.
    தேர்வுப் பணிகளில் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஆகியோரை கணினி மென்பொருள் பயன்படுத்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai